தேர்தல் ஆணையர் விவகாரம்: விஜய் பேச வேண்டும் – வீரபாண்டியன்

தேர்தல் ஆணையர் விவகாரம்: விஜய் பேச வேண்டும் – வீரபாண்டியன்

2 ஐப்பசி 2026 வெள்ளி 06:11 | பார்வைகள் : 168


தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மிண்ட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியதாவது:

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் பேச வேண்டும். இதற்கு அவர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். வாக்குரிமை என்பது போராடிப் பெற்ற உரிமையாகும். எனவே, வாக்குரிமை தொடர்பான இந்த விவகாரத்தில் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. 13 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக ஆகிய 3 கட்சிகளும் பணம் கொடுக்கின்றன. வீடுகளில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுத்து, அதற்கேற்ப எவ்வளவு பணம் வழங்க வேண்டும் என்பதையும் கணக்கிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் மற்ற கட்சிகள் யாரும் மக்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடம் அரசியல் இல்லை. வெறுமனே தலைவர்கள் வந்து பேசிவிட்டு செல்கின்றனர். நாங்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க