நிறைவேறாத நம்பிக்கை: வெளியாகிறது அண்ணாமலை எழுதிய புத்தகம்

நிறைவேறாத நம்பிக்கை: வெளியாகிறது அண்ணாமலை எழுதிய புத்தகம்

2 ஐப்பசி 2026 வெள்ளி 08:19 | பார்வைகள் : 231


வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை எழுதியுள்ள **‘Unfinished Hope’ (நிறைவேறாத நம்பிக்கை)** என்ற நூல் விரைவில் வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“எனது புதிய புத்தகமான ‘Unfinished Hope’ வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தகம் தற்போது அமேசானில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது. விரைவில் நீங்கள் வழக்கமாகச் செல்லும் புத்தகக் கடைகளிலும் இந்நூல் கிடைக்கும்.

இந்தியாவின் பெருமை கொள்ளத்தக்க பல அம்சங்களை எடுத்துரைப்பதுடன், அதே நேரத்தில் பல கேள்விகளையும் எழுப்பும் ஒரு நாட்டின் சித்திரத்தை வரைவதற்கான எனது முயற்சியே ‘Unfinished Hope’ நூல்.

இந்தியா மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட நாடாக உள்ளது. நாட்டின் அசைக்க முடியாத ஆற்றலில் பெரும்பகுதி இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்தியா பெருமிதம் கொள்ளும் அம்சங்களும், நிறைவேறாமல் இருக்கும் எதிர்பார்ப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாபெரும் தேசத்தின் நிறைவேறாத எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கடமை உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், இந்தப் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் முழு வருவாயும் வீ தி லீடர்ஸ் அமைப்பு மேற்கொள்ளும் சமூக நலப் பணிகளுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க