ஜனாதிபதி வேட்பாளர் Édouard Philippe நோயாளிகளையும் மருத்துவர்களையும் களங்கப்படுத்துவதாக குற்றச்சாட்டு!!
29 ஆவணி 2026 சனி 22:34 | பார்வைகள் : 254
ஜனாதிபதி வேட்பாளர் Édouard Philippe, வேலை நிறுத்தச் சான்றிதழ்களுக்கு (Arrêts de travail) வழங்கப்படும் வசதியை “வரம்பில்லா சலுகை” போல முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியதன் மூலம், “நோயாளிகளை களங்கப்படுத்தி, மருத்துவர்களின் நம்பகத்தன்மையை குறைக்கிறார்” என்று MG France மருத்துவ சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “சில கவனத்தை ஈர்க்கும் குறும் வாசகங்களைச் சொல்லுவதற்காக பலிகடாக்களைத் தேடுவது பிரச்சினைகளைத் தீர்க்காது” என்று பொதுமருத்துவரும் சங்கத் தலைவருமான Agnès Giannotti தெரிவித்துள்ளார்.
Édouard Philippeஇன் ஆதரவாளரான Horizons கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux, கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாகவும் பிரான்சின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு கடுமையான நிதிச் சிக்கலில் இருப்பதாகவும், பிரபலமற்றது என்ற காரணத்தால் தேவையான மாற்றங்களை செய்யாமல் விட்டால் தற்போதைய சமூக மாதிரி சிதைந்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்காக வழங்கப்படும் குறுகிய கால விடுப்புகளுக்கும், மருத்துவக் காப்பீட்டுத் துறைக்கு அதிக செலவை ஏற்படுத்தும் நீண்டகால விடுப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என அவர் தெரிவித்தார். பணியிடங்களில் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள் மற்றும் மூட்டு வலிகள் போன்றவை நீண்டகால வேலை நிறுத்தங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதால், அரசியல் தலைவர்கள் இந்த சிக்கல்களுக்கு உண்மையான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire