ரூ.23 ஆயிரத்திற்கு நிலவில் ஒரு ஏக்கர்: நூதன மோசடி
31 ஆவணி 2026 திங்கள் 11:00 | பார்வைகள் : 126
வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்க விரும்பிய இன்ஜினியர் சரவணன், 32, இணையதளத்தில் தேடியபோது கிடைத்த விளம்பரத்தை நம்பி, நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்காக ரூ.23,000 செலுத்தியதுடன், அதற்கான ஆவணங்களையும் பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 32. இன்ஜினியரிங் பட்டதாரியான இவருக்கும், மதுரையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தன் வருங்கால மனைவிக்கு வழக்கத்திற்கு மாறான திருமண பரிசு ஒன்றை வழங்க சரவணன் திட்டமிட்டார்.
இதற்காக இணையதளத்தில் தேடியபோது, நிலவில் இடம் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதை உண்மை என நம்பிய சரவணன், அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டார். பின்னர், தனது வருங்கால மனைவியின் பெயரில் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளார்.
இதற்காக சரவணனிடம் ரூ.23,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கியதாக கூறப்படும் 'ஸ்டேடியா சிவ சக்தி' என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்களும் சரவணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அவரது வருங்கால மனைவி செப்., 17ல் நிலவுக்கு புறப்படும் வகையில் பயண டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், ''எனது வருங்கால மனைவிக்காக நிலவில் இடம் வாங்கியுள்ளேன். நிச்சயம் அங்கு செல்வோம்,'' என்றார்.
<block_G><subboxhd>இது முற்றிலும் மோசடி</subboxhd>
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச விண்வெளி சட்ட விதிகளின்படி, நிலவில் எந்தவொரு தனிநபரோ அல்லது தனியார் நிறுவனமோ நிலத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது அதற்கு உரிமை கொண்டாடவோ அனுமதி இல்லை.
கடந்த 1967ல் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருட்கள் எந்தவொரு தனிநாட்டின் இறையாண்மைக்கும், பயன்பாட்டிற்கும் அல்லது தனிநபர் உரிமைக்கும் உட்பட்டவை அல்ல.
விண்வெளி என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பொதுவான சொத்தாகும். நிலவில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சரவணனிடம் ரூ.23,000 வசூலித்திருப்பது முற்றிலும் ஏமாற்று வேலை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire