மரின் லூ பென் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு அபராதம்!!
30 ஆவணி 2026 ஞாயிறு 22:18 | பார்வைகள் : 371
மரின் லூ பென் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்லாமிய ஹிஜாப் அணிவதைத் தடை செய்து, அதை அணியும் பெண்களுக்கு அபராதம் விதிக்க RN கட்சி திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்-பிலிப் தாங்கி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் கட்சிக்குள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு, இறுதியில் அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய தீவிரவாதக் கொள்கைக்கு எதிராகப் போராடுவதற்காகவும், உலகம் முழுவதும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கு ஆதரவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் » என்று ஜோன்-பிலிப் தாங்கி BFMTV-யில் தெரிவித்தார். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்வது, மரின் லூ பென்னின் முந்தைய ஜனாதிபதி தேர்தல் திட்டங்களிலும் இடம்பெற்றிருந்தது.
இந்த முடிவுக்கு 60% முதல் 70% வரையிலான பிரெஞ்சு மக்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார். ஹிஜாப் என்பது வெறும் ஆடை அணியும் சுதந்திரத்தின் அடையாளம் மட்டுமல்ல; பிரான்ஸ் நீண்ட காலமாகப் பாதுகாத்து வந்த மதிப்புகளுக்கு முரணான ஒரு கொள்கையின் அடையாளம் என்றும் அவர் வாதிட்டார்.
அடுத்த ஆண்டு RN கட்சி ஆட்சிக்கு வந்தால், தடை செய்யப்பட்ட பின்னரும் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இதேவேளை, சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் மரின் லூ பென் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire