மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது: மூவர் மீட்பு, இரு மாலுமிகள் மாயம்!!
31 ஆவணி 2026 திங்கள் 07:36 | பார்வைகள் : 220
இங்கிலாந்தின் Plymouth கடற்பகுதிக்கு அருகே பிரெஞ்சு மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில், அதில் இருந்த ஐந்து மாலுமிகளில் மூவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். Saint-Brieuc (Côtes-d’Armor) நகரில் பதிவு செய்யப்பட்ட Maranello என்ற இழுவை மீன்பிடிப் படகு, சனிக்கிழமை மாலை La Manche கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதாக Atlantique கடல்சார் மாகாண நிர்வாகம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
Plymouth கடற்பகுதியில் மீன்பிடி உபகரணத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக « Maranello » அவசர உதவிக்கான அழைப்பை விடுத்திருந்தது. அருகில் சென்றுகொண்டிருந்த மற்றொரு Saint-Brieuc பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு, « Maranello » கடலில் மூழ்குவதற்கு முன்பாக அதன் ஐந்து பேர் கொண்ட குழுவில் மூவரை மீட்டது. காணாமல் போன இரு மாலுமிகளைத் தேடும் தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தேடுதல் பணிகளை பிரித்தானிய அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர். பிரெஞ்சு கடற்படையின் Falcon 50 விமானம், இரண்டு மீட்புப் படகுகள் மற்றும் இரண்டு பிரித்தானிய விமானங்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மூன்று மாலுமிகளில் ஒருவர் காயமடைந்திருந்ததால், ஹெலிகொப்டர் மூலம் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற இரு மாலுமிகளும் Plymouth நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு கரையில் மருத்துவ மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன இரு மாலுமிகளையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire