Paristamil Navigation Paristamil advert login

சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு - உலகின் கவனம் ஈர்க்கும் சந்திப்பு

சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு - உலகின் கவனம் ஈர்க்கும் சந்திப்பு

1 புரட்டாசி 2026 செவ்வாய் 12:56 | பார்வைகள் : 204


சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையேஇ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த மே மாதத்திற்குப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். சர்வதேச ஒழுங்கில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்திருந்தாலும்பீய்ஜிங் மற்றும் மொஸ்கோ இடையேயான உறவுகள் மேலும் உறுதியடைந்துள்ளதாக ஜின்பிங் குறிப்பிட்டார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும் இரு நாடுகளுக்குடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக புடின் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்பான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

இதில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துவான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்