Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸிடம் இருந்து 4.3 பில்லியன் யூரோக்களில் 4 போர்க்கப்பல்களை வாங்கிய ஸ்வீடன்!!

பிரான்ஸிடம் இருந்து 4.3 பில்லியன் யூரோக்களில் 4 போர்க்கப்பல்களை வாங்கிய ஸ்வீடன்!!

31 ஆவணி 2026 திங்கள் 22:21 | பார்வைகள் : 222


ஸ்வீடன் அரசு, பிரான்ஸிடம் இருந்து நான்கு நவீன இராணுவ பாதுகாப்பு மற்றும் தலையீட்டு போர்க்கப்பல்களை (FDI) வாங்குவதற்காக 4.3 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி திங்கட்கிழமை  கையெழுத்திட்டுள்ளது. ஜனாதிபதி Emmanuel Macron, ஸ்வீடனின் Stockholm நகருக்கு சென்றிருந்த வேளையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அங்கு ஸ்வீடன் பிரதமர் Ulf Kristersson அவரை வரவேற்றார்.

இந்த ஒப்பந்தத்தில் பிரெஞ்சு போர்க்கப்பல் தயாரிப்பு நிறுவனமான Naval Group நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Pierre Eric Pommellet மற்றும் ஸ்வீடன் பாதுகாப்பு உபகரண நிர்வாக அமைப்பான FMV-யின் இயக்குநர் Mikael Granholm ஆகியோர் கையெழுத்திட்டனர். 2022ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கிய பின்னரும், 2024ஆம் ஆண்டு நேட்டோவில் இணைந்த பின்னரும் ஸ்வீடன் தனது பாதுகாப்பு மற்றும் இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

“ஸ்வீடன்–பிரான்ஸ் நட்புறவுக்கு இது ஒரு முக்கியமான நாள்” என்று ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையில் புதிய கட்டம் உருவாகியுள்ளதாகவும், வலிமையானதும் இறையாண்மை கொண்டதுமான ஐரோப்பாவை உருவாக்குவதே இரு நாடுகளின் ஒரே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று, புதுமை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் வலிமையானதும் பாதுகாப்பானதுமான ஐரோப்பாவை உருவாக்க வேண்டும் என்ற ஒரே இலக்கை இரு நாடுகளும் கொண்டுள்ளதாக ஸ்வீடன் பிரதமர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்