Paristamil Navigation Paristamil advert login

ஈரான், ஆர்மீனியா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஈரான், ஆர்மீனியா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

1 புரட்டாசி 2026 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 109


கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான் மற்றும் ஆர்மீனியா பிரதமர் நிகோல் பஷின்யான் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை ஆர்மீனியா பிரதமர் நிகோல் பஷின்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, பொருளாதாரம், மருந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், மேற்காசிய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியானை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக தாக்குதல் நடத்திய நிலையில், கடந்த மார்ச் மாதம் ஈரான் அதிபர் பெஜெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது, ஈரானில் நிலவும் சூழ்நிலை குறித்து பெஜெஸ்கியான் பிரதமர் மோடியிடம் விளக்கியிருந்தார்.

அப்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறிய பிரதமர் மோடி, அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரகம் வாயிலாக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்