Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது: பிரதமர் மோடி

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது: பிரதமர் மோடி

2 புரட்டாசி 2026 புதன் 09:36 | பார்வைகள் : 114


பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை என்பதை நாம் அனைவரும் ஒரே குரலில் கூற வேண்டும் என, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு

மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.

முதலில் உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த அவர், அதன்பின்னர் கிர்கிஸ்தானுக்கு சென்றார். அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மாநாடு, இளம் எழுத்தாளர்கள் மாநாடு மற்றும் இளம் விஞ்ஞானிகள் மாநாடு உள்ளிட்டவற்றை இந்தியா மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாதுகாப்பு, இணைந்து செயல்படுதல், வாய்ப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் மூன்று முக்கியத் தூண்களாக, S - பாதுகாப்பு (Security), C - இணைந்து செயல்படுதல் (Connectivity), O - வாய்ப்பு (Opportunity) ஆகியவை உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும், அதாவது அதற்கான நிதியுதவி, ஆள்சேர்ப்பு மற்றும் புகலிடங்கள் ஆகியவற்றை நாம் தகர்த்தெறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பயங்கரவாதம் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை நாம் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்.

போர்க்களத்தில் இதற்கு தீர்வு காண முடியாது. அனைத்து போர்களும், மோதல்களும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் வளர்ச்சி

வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், வளர்ச்சிக்கான புதிய வழிகளை உருவாக்குவதற்குமான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும், மக்கள் இடையிலான உறவுகளுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்