ரேஷன் கடைகளில் வெங்காயம்: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
2 புரட்டாசி 2026 புதன் 11:44 | பார்வைகள் : 123
ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படும் என உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் அறிவித்தார்.
வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்பனை
சட்டசபையில் உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது:
விவசாயிகளின் தோழன் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது. மேலும், அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல்
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, வெங்காய விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைக்கு 1 கிலோ
ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு நகர்ப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களை கொண்ட 8,739 நியாயவிலை கடைகளில், வரும் 3-ம் தேதி முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு வழங்கப்படும்.
தேவைக்கேற்ப கூடுதல் கொள்முதல்
தேவையின் அடிப்படையில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கூடுதலாக வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
யேசையா ஞானப்பிரகாசம்
Dugny- France, கொழும்பு
வயது : 68
இறப்பு : 27 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire