Paristamil Navigation Paristamil advert login

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

2 புரட்டாசி 2026 புதன் 13:53 | பார்வைகள் : 109


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி கைகுலுக்கி, சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு

கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கிர்கிஸ்தான் அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து, முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ஜின்பிங்குடன் கலந்துரையாடல்

மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி கைகுலுக்கினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அருகில் இருந்தார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

இம்மாத இறுதியில் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர்.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்க சீனா ஆதரவு அளிக்கும் என ஷி ஜின்பிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

டெல்லி புறப்பட்டார் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்