Paristamil Navigation Paristamil advert login

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 14.8 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 14.8 சதவீதம் அதிகரிப்பு

2 புரட்டாசி 2026 புதன் 14:57 | பார்வைகள் : 106


ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ.1,99,853 கோடி வசூல்

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வாயிலாக ரூ.1,99,853 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,74,116 கோடி வசூலாகியிருந்தது.

மேற்காசிய போர் மற்றும் வரி விதிப்பு பிரச்சினைகளுக்கு மத்தியில், இரண்டாம் காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நுகர்வு வலுவாக இருப்பதை இந்த ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு காட்டுகிறது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு அறிவித்த மறுநாளில், ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு பரிமாற்ற வருவாய் அதிகரிப்பு

உள்நாட்டு பரிமாற்றங்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் 9.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடியாக உள்ளது.

இறக்குமதி வாயிலாக கிடைக்கும் வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.62,604 கோடியாக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,99,853 கோடியாக உள்ளது.

ஜிஎஸ்டி வசூல் விவரம்
மத்திய ஜிஎஸ்டி (CGST): ரூ.38,413 கோடி
மாநில ஜிஎஸ்டி (SGST): ரூ.46,316 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST): ரூ.1.15 லட்சம் கோடி

ஜிஎஸ்டி ரீபண்ட் வாயிலாக ரூ.31,795 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தின் நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது.

இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்