17,000 மாணவர்களுக்கு இலவச மதிய உணவு – பரிஸ் பள்ளிகளில் புதிய திட்டம் தொடக்கம்!!
1 புரட்டாசி 2026 செவ்வாய் 20:54 | பார்வைகள் : 203
Emmanuel Grégoire தலைமையிலான பரிஸ் நகர நிர்வாகத்தின் புதிய திட்டம், இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பரிஸ் நகரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 17,000 பள்ளி மாணவர்கள், பள்ளி உணவகங்களில் இலவசமாக மதிய உணவு பெறவுள்ளனர். இந்த திட்டத்தை முன்னிட்டு, Beslay மழலையர் பள்ளி உணவகத்தில் செவ்வாய்க்கிழமை மதிய உணவை உட்கொண்ட Emmanuel Grégoire, மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டார்.
பள்ளி தொடங்கும் நாளான செப்டெம்பர் 1ஆம் திகதி, பரிஸ் நகரில் ஆரம்பப் பள்ளிகளில் தினமும் உணவருந்தும் சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கும் பள்ளி உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. Beslay பள்ளியில் சுமார் 80 குழந்தைகள் மதிய உணவு உட்கொண்ட நிலையில், அவர்களுக்கு பீட்ரூட், ரவியோலி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு உணவை இலவசமாக வழங்கும் இந்த நடவடிக்கை சமூக சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இலவச உணவு பெறாத மற்ற குடும்பங்களுக்கான பள்ளி உணவகக் கட்டணம் 2032ஆம் ஆண்டு வரை அதிகரிக்கப்படாது என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire