அமெரிக்காவின் புதிய தாக்குதல் - ஈரான் கடுமையான பதில் தருவதாக எச்சரிக்கை
2 புரட்டாசி 2026 புதன் 07:24 | பார்வைகள் : 193
அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு, ஈரான் கடுமையான பதிலடி தருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சென்ட்காம் (CENTCOM) அறிவிப்பின்படி, அமெரிக்க இராணுவம் ஈரானின் IRGC இலக்குகளை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல், ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடந்த முயற்சிகள் மற்றும் அமெரிக்க வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஈரான் உடனடியாக பதிலளித்துள்ளது. “அமெரிக்கா புதிய தாக்குதலுக்காக கடுமையான தண்டனை அனுபவிக்கும்” என IRGC பேச்சாளர் ஹொசெயின் மொஹெப்பி எச்சரித்துள்ளார்.
ஈரானின் தெற்கு பகுதிகளில், குறிப்பாக கோனராக், பந்தர் அப்பாஸ் மற்றும் கிஷம் தீவு ஆகிய இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இந்த தாக்குதல் பெரியது என்றும், சக்திவாய்ந்தது என்றும்” கூறி, ஈரான் பதிலடி கொடுத்தால் “மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும்” என எச்சரித்துள்ளார்.
அவர், “இது மிகப்பெரிய தாக்குதல் அல்ல, ஆனால் அப்படியொரு தாக்குதல் காத்திருக்கிறது. அது நடந்துவிட்டால், ஈரானின் கொஞ்ச நஞ்ச பகுதி தன மிஞ்சும்” எனக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, Brent crude எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலன் 4 டொலராக (3.8 லிட்டர்) உயர்ந்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா லாரக் தீவை தாக்கியதற்குப் பிறகு, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தை ஏவுகணைகளால் தாக்கிய சம்பவத்தின் தொடர்ச்சியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
யேசையா ஞானப்பிரகாசம்
Dugny- France, கொழும்பு
வயது : 68
இறப்பு : 27 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire