Paristamil Navigation Paristamil advert login

RER D தொடருந்து சேவை நெருக்கடி தீவிரம்: பயணிகள் கடும் அதிருப்தி!!

RER D தொடருந்து சேவை நெருக்கடி தீவிரம்: பயணிகள் கடும் அதிருப்தி!!

2 புரட்டாசி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 606


RER D தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள தொடர் குறைப்பால் பயணிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி முதல், இந்த தொடருந்து பாதையின் தெற்குப் பகுதிகளில் சுமார் 30 தொடருந்து சேவைகள் நீக்கப்பட்டுள்ளன. கோடை காலப் பணிகள் மற்றும் இடையூறுகளுக்குப் பின்னரும் பிரச்சினை தொடர்வதால், தினமும் RER D தொடருந்தை நம்பிப் பயணிக்கும் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Corbeil-Essonnes கிளையில் தினசரி 15 தொடருந்துகளும், Melun கிளையில் 12 தொடருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெரிசல் நேரங்களுக்கு அப்பால் இந்தக் குறைப்புகள் அதிகமாக உள்ளன. Vigneux-sur-Seine பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர், “எந்த நேரத்திலும் எனது தொடருந்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம்; கடந்த சில நாட்களாக இரண்டு தொடருந்துகளில் ஒன்று ரத்து செய்யப்படுகிறது” என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடருந்துகளை பராமரிப்பதற்கான திறனை அதிகரிக்கும் பணிகளே சேவை குறைப்புக்குக் காரணம் என SNCF தெரிவித்துள்ளது. ஏற்கனவே RER D சேவை 2026ஆம் ஆண்டின் இறுதி வரை சுமார் 5 சதவீதம் குறைக்கப்படலாம் என்றும், வார நாட்களில் சுமார் 25 தொடருந்துகள் குறைக்கப்படும் என்றும் SNCF அறிவித்திருந்தது. புதிய பராமரிப்பு நிலையம் 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் செயல்படத் தொடங்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்