சட்டசபையில் தவறான கருத்தை திரும்பப் பெற்ற உதயநிதி
3 புரட்டாசி 2026 வியாழன் 12:14 | பார்வைகள் : 285
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை திரும்பப் பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார். இதையடுத்து, அவரது பெருந்தன்மையை சபாநாயகர் பிரபாகர் பாராட்டினார்.
சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது:
“110 விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது நடைபெற்ற விவாதத்தில், ‘எங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடவில்லை’ என தெரிவித்தேன்.
பழைய சபை குறிப்புகளை சபாநாயகர் எடுத்து காண்பித்துள்ளார். அதில், 110 விதியின் கீழ்தான் அந்த அறிவிப்புகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்பது தெரியவந்துள்ளது. எனவே, நாங்கள் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து சபாநாயகர் பிரபாகர் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவரிடம் ஆதாரத்தை நான் காண்பித்ததும், அவர் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார். அந்த பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன்” என்றார்.



