கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: நாளை தீர்ப்பு
3 புரட்டாசி 2026 வியாழன் 04:27 | பார்வைகள் : 284
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு இன்று (செப்.3) தீர்ப்பளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும், அதனை மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது



