விண்ணில் ஏவப்படும் இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்
3 புரட்டாசி 2026 வியாழன் 03:53 | பார்வைகள் : 281
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ரொக்கெட் மூலமாக செப்டம்பர் 4 ஆம் திகதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F17 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இஸ்ரோ தயாரித்துள்ள ஒரு அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (GISAT-1A ) ஆகும்.
EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளானது பூமியிலிருந்து 36,000 கிலோ மீற்றர் உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிக்கவும், விரைவாக மீட்புப் பணிகளைத் திட்டமிடவும் இது உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் படங்களை வழங்கும் திறன் கொண்டது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.



