எரிபொருள் விலை உயர்வு: அரசு உதவித் திட்டங்களை நீட்டிப்பு!!

எரிபொருள் விலை உயர்வு: அரசு உதவித் திட்டங்களை நீட்டிப்பு!!

3 புரட்டாசி 2026 வியாழன் 14:17 | பார்வைகள் : 1225


அரசு எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க வழங்கி வரும் உதவித் திட்டங்களை குறைந்தபட்சம் செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அதிக தூரம் வாகனம் ஓட்டும் தொழிலாளர்களுக்கான « gros rouleur » எனப்படும் உதவித் திட்டம் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. வேலைக்குச் செல்லும்  மக்களுக்கும், பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் மக்களுக்கும் அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அரசின் செய்தித் தொடர்பாளர் மற்றும் எரிசக்திக்கான துணை அமைச்சருமான Maud Bregeon தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்காக வழங்கப்படும் குறிப்பிட்ட எரிபொருள் உதவிகளும் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகின்றன. அவை அக்டோபர் 31ஆம் தேதி வரை தொடரும். அதேவேளை, போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உதவிகள் இனி தொடராது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. உதவிகளின் அளவு மற்றும் காலம் குறித்து அரசாங்கம் வரும் நாட்களில் தொழில்துறை பிரதிநிதிகளுடன் மேலும் ஆலோசனை நடத்த உள்ளது.

எரிபொருள் விலையை நேரடியாக கட்டுப்படுத்தும் அல்லது பம்புகளில் விலையை முடக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாது என்றும் Maud Bregeonதெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நடைமுறையில் சாத்தியமற்றதுடன், எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார். எனவே, மத்திய கிழக்கின் நிலைமை மற்றும் எரிபொருள் சந்தையின் மாற்றங்களைப் பொறுத்து உதவித் திட்டங்களை படிப்படியாக மாற்றியமைப்பதே அரசின் தற்போதைய அணுகுமுறையாக உள்ளது.

தொடர்ந்து படிக்க