இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

4 புரட்டாசி 2026 வெள்ளி 11:03 | பார்வைகள் : 270


நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அந்த இயக்கத்தில் அதிருப்தியில் இருந்த மணிஷ் பிரம்பட், தனியாக புதிய கட்சியை தொடங்கியதுடன், அபிஜீத் திப்கே டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் டீமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் கிண்டலாக தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளிநாட்டில் இருந்த நிலையில், தான் இந்தியா திரும்பியதும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் இரண்டாக உடைந்துள்ளது. அந்த இயக்கத்தில் இருந்து சமீபத்தில் விலகிய மணிஷ் பிரம்பட், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக மணிஷ் கூறியதாவது:

இன்று நாங்கள் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குகிறோம். மக்களின் ரத்தம், வியர்வை சிந்தி உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பின்னர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தேர்வு செய்யப்பட்ட ஒரு குழுவாக தன்னை மாற்றிக்கொண்டதே இதற்கு காரணம்.

அரசியல் பேரங்களில் ஈடுபடுவதுதான் அவர்களின் நோக்கம். மாணவர்கள் அல்லது பிற மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்காக போராடுவதில் அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

மாறாக, கெஜ்ரிவாலின் கட்டளைப்படி மட்டுமே செயல்படும் அவர்கள், பாஜ.,வுக்கு எதிரான கட்சியை ஆதரிப்பதற்காக பாஜ.,வை எதிர்க்க விரும்புகின்றனர். சிஜேபி கட்சி குழுவுக்காக தேர்வு செய்யப்பட்ட எட்டு பேருக்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு உள்ளது.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தை ஆதரித்தவர்களுக்கு சிஜேபியில் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து படிக்க