நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

4 புரட்டாசி 2026 வெள்ளி 14:34 | பார்வைகள் : 521


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார்.

அவர் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
 

தொடர்ந்து படிக்க