சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா

சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா

4 புரட்டாசி 2026 வெள்ளி 17:10 | பார்வைகள் : 261


39 பந்துகளில் சதம் விளாசிய தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக்(CPL) தொடரின் இன்றைய போட்டியில், செயின்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியாட்ஸ்(SKN P) மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ்(SLK) அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற SLK அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய SKN Pஅணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது.

SKN P தரப்பில் அதிகபட்சமாக தசுன் ஷனகா 121 ஓட்டங்களும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 64 ஓட்டங்களும் குவித்தனர்.

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய SLK, 13.5 ஓவர்களில் வெறும் 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.

SLK தரப்பில் அதிகபட்சமாக டிம் சைஃபெர்ட் 50 ஓட்டங்கள் குவித்தார். SKN Pதரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெர்மையா லூயிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம், SKN Pஅணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

43 பந்துகளில், 8 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 121 ஓட்டங்கள் குவித்த தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக சிபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸல், டிம் சைஃபெர்ட், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் அடித்தததே சாதனையாக இருந்தது.

தசுன் ஷனகா இந்த போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனையை முறியடித்துள்ளார்.  

 

தொடர்ந்து படிக்க