CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா
4 புரட்டாசி 2026 வெள்ளி 18:13 | பார்வைகள் : 262
சுரேஷ் ரெய்னா, CSK அணியின் பயிற்சியாளராக அணி நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த CSK அணி, 2025 ஐபிஎல் தொடரில் கடைசி இடம், 2026 ஐபிஎல் தொடரில் 8வது இடம் என பரிதாபமான நிலையில் உள்ளது.
2009 ஐபிஎல் தொடர் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் CSK அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட CSK முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ராவின் 'பெயிட் & பவுல்' என்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதில், மீண்டும் CSK அணியுடன் காணப்பட வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "நான் அவர்களிடம் இதுபற்றி கேட்டிருக்கிறேன், மேலும் எனது ஆர்வத்தையும் தெரிவித்திருக்கிறேன். இப்போது முடிவெடுப்பது சிஎஸ்கே நிர்வாகத்தின் கையில் உள்ளது.
ஒரு பயிற்சியாளராகவோ அல்லதுவழிகாட்டியாகவோ என்னால் அணிக்கு பங்களிக்க முடியும் என்று அவர்கள் கருதினால், நான் நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
சிஎஸ்கே எனக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அணியாக இருந்து வருகிறது, மேலும் எதிர்காலத்தில் மீண்டும் அவர்களுடன் இணைவது ஒரு கௌரவமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
CSK அணிக்காக 12 ஆண்டுகளில், 176 போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, 1 சதம், 33 அரைசதம் உட்பட 4687 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக உள்ள மைக் ஹசி இங்கிலாந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்திருத்துள்ள நிலையில், அவரும் தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.



