இனி வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் கட்டணங்களை செலுத்த முடியும்
4 புரட்டாசி 2026 வெள்ளி 17:59 | பார்வைகள் : 316
வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
இந்தியாவில், மின்சாரம், தண்ணீர், LPG சிலிண்டர், இன்சூரன்ஸ், உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளுக்கு டிஜிட்டல் முறையிலே கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.
பெரும்பாலும், இந்த சேவைகளுக்கு கட்டணம் செலுத்த பயனர்கள் Google Pay, Paytm உள்ளிட்ட செயலிகளையே பயன்படுத்தி வந்தனர்.
தற்போது வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறாமலேயே இந்த கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலம் இயங்கும் இதில், 30 பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்குப் பயனர்கள் கட்டணம் செலுத்த முடியும்.
வாட்ஸ்அப்பில் முகப்புத் திரையின் மேல் பகுதியில் உள்ள '₹' குறியீட்டைத் கிளிக் செய்து, அதில் பில் கட்டணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகையை சரிபார்த்து யுபிஐ போன்றவற்றின் மூலம் வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறாமலே கட்டணத்தை செலுத்தலாம்.
இதில், பயனர்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகம் என ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இணைத்து அதனை நிர்வகிக்கலாம்.
கடந்த காலத்தில் செலுத்திய கட்டண விவரங்கள் மற்றும் வரவிருக்கும் கட்டண நிலுவைகளைக் இதில் பார்க்க முடியும்.
இந்த ‘Bill Payments’ சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



