வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்

5 புரட்டாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 213


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1ஏ’ என அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

இதற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. கவுண்ட்டவுன் நிறைவடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்த 18 நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கொண்டாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்திய நிலப்பரப்பை கண்காணிக்கும்

இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ள ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோளில், மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து, நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் இதுவாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க