Porte de Montreuil தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவி மாற்றம் – அனைத்து அபராதங்களும் ரத்து!!

Porte de Montreuil தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவி மாற்றம் – அனைத்து அபராதங்களும் ரத்து!!

5 புரட்டாசி 2026 சனி 07:22 | பார்வைகள் : 1503


பரிஸ் நகரின் வாகன சுற்றுவட்டப் பாதையில் (périphérique) Porte de Montreuil பகுதியில் ஆகஸ்ட் மாத இறுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி வேகக் கண்காணிப்பு கருவி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. இதுவரை அந்த கருவியில் பதிவு செய்த அனைத்து அபராதங்களும் ரத்து செய்யப்படும் என Préfecture de police de Paris தெரிவித்துள்ளது.

Porte de Montreuil பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, வழக்கமாக 50 km/h வேக வரம்பு கொண்ட périphérique-ன் குறிப்பிட்ட பகுதியில் தற்காலிகமாக 30 km/h வேக வரம்பு அமல்படுத்தப்பட்டது. இதற்காக ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது. ஆனால் பல வாகன ஓட்டிகள் தாங்கள் கண்காணிப்பு கருவியில் சிக்கியதாகவும், அந்த இடத்தில் கண்காணிப்பு கருவி இருப்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இதுவரை பதிவு செய்யப்பட்ட அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே அபராத அறிவிப்பு பெற்ற வாகன ஓட்டிகளுக்கும் இந்த ரத்து தொடர்பான தகவல் அனுப்பப்படும். கண்காணிப்பு கருவி தற்போது Porte de Montreuil பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, பின்னர் வேறு இடத்தில் பொருத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

தொடர்ந்து படிக்க