சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் - 21 பேர் பலி

சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் - 21 பேர் பலி

5 புரட்டாசி 2026 சனி 07:34 | பார்வைகள் : 260


வடக்கு ஆப்பிரிக்க  நாடான  சூடானில் கிளர்ச்சியாளர்களின்  நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் கவ்டா அருகே உள்ள டிபி, லுவிரி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

தொடர்ந்து படிக்க