Bobigny கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு - காவல்துறையின் தகவலாளருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!
5 புரட்டாசி 2026 சனி 19:30 | பார்வைகள் : 2138
Bobigny நகரில் 2022ஆம் ஆண்டு Tiekoura K. என்பவரை கொலை செய்த வழக்கில் Elias Zidi என்பவர் வெள்ளிக்கிழமை மாலை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் ஒரு தகவல் அளிப்பவர் என்ற தகுதியின் காரணமாக 30 ஆண்டு சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்தார். மேலும் அவருக்கு 23 ஆண்டுகள் குற்றவியல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்ற விசாரணையின் பின்னர், ஐந்து மணி நேர ஆலோசனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. Elias Zidi குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியிருந்தது. எனினும், அவர் காவல்துறையினரின் தகவலாளராக செயல்பட்டிருந்ததை நீதிமன்றம் தண்டனையை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொண்டது.
Elias Zidiஇன் வன்முறை குற்றப் பின்னணியையும், அவர் ஆபத்தான நபர் என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதேவேளை, அவரது காவல்துறை தகவலாளர் என்ற நிலை அவருக்கு சாதகமான அம்சமாக கருதப்பட்டது. அவரது மனநிலை காரணமாக குற்றப்பொறுப்பு குறைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



