சிங்கப்பெண் படை: 238 புகார்களுக்கு நடவடிக்கை

சிங்கப்பெண் படை: 238 புகார்களுக்கு நடவடிக்கை

6 புரட்டாசி 2026 ஞாயிறு 07:43 | பார்வைகள் : 288


தமிழகம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

238 புகார்களுக்கு நடவடிக்கை

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் பகுதிகளாக கருதப்படும் 12,547 இடங்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையிலான 7 நாட்களில், இந்த அதிரடிப்படையினர் 238 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

20 வழக்குகள் பதிவு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அளித்த புகார்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், காணாமல்போன பெண்கள் மற்றும் குழந்தைகள் என 5 பேர் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 61 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,448 இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க