லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
6 புரட்டாசி 2026 ஞாயிறு 08:47 | பார்வைகள் : 311
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த யாசிர் என்ற பாகிஸ்தான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் 2024-ம் ஆண்டு ராணுவத்தினர் மற்றும் பொதுப்பணித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருக்கும் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



