பாஜ கூட்டணியில் திமுக - அதிமுக; அமைச்சர் நிர்மல்குமார்
6 புரட்டாசி 2026 ஞாயிறு 10:53 | பார்வைகள் : 224
தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:
த.வெ.க., ஆட்சி நீடிக்காது என தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் தொடர்ந்து கூறி வருகின்றன. இதன் மூலம் அந்த இரு கட்சிகளும் சேர்ந்திருப்பது தெரியவருகிறது. எனவே, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் சட்டசபையில் முதல்வரின் பதிலுரை முடிந்த பின்னர், அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கும். அதன்பிறகு மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. தொடர்ந்து கேள்வி நேரம் வைத்தால் இரவு 9 மணியாகிவிடும். இதன் காரணமாகவே அன்றைய தினம் கேள்வி நேரம் இடம்பெறவில்லை.
கோவில் விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். முந்தைய அரசுகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யமாட்டோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் பெயரை இடம்பெறச் செய்யக்கோரி யாராவது நீதிமன்றத்துக்கு செல்வார்களா? இது சாதாரணமான விஷயம். ஒன்றும் இல்லாத விவகாரத்தை தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜன் பேசி வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.



