தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் விக்னேஷ்

தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் விக்னேஷ்

6 புரட்டாசி 2026 ஞாயிறு 11:56 | பார்வைகள் : 274


தவறு செய்தவர்கள் த.வெ.க., ஆட்சியில் நிச்சயம் தண்டிக்கப்படுவர். போராட்டம் நடத்தி மிரட்ட நினைத்தால் இந்த அரசு ஒருபோதும் அடிபணியாது” என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். மேலும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கடை பராமரிப்பு, தீபாவளி போனஸ் மற்றும் பொங்கல் முன்பணம் வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மது பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.

கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற பகுதிகளில் ஊழியர்களை தவறான பாதைக்கு சிலர் வழிநடத்துகின்றனர். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.

போராட்டம் நடத்தி மிரட்ட நினைத்தால், இந்த அரசு ஒருபோதும் அடிபணியாது.

இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க