நவ.1க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: ஐகோர்ட்

நவ.1க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: ஐகோர்ட்

6 புரட்டாசி 2026 ஞாயிறு 12:58 | பார்வைகள் : 258


சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

பெயர்ப்பலகைகளில் தமிழ் பெயருக்கு கீழே ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ந்தேதிக்குள் கடைகளில் பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்தக் காலக்கெடுவுக்குள் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்கத் தவறினால், அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

தொடர்ந்து படிக்க