ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்: ராஜ்மோகன்

ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்: ராஜ்மோகன்

6 புரட்டாசி 2026 ஞாயிறு 14:04 | பார்வைகள் : 381


நாங்கள் ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம்; தொடவும் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

ஆற்றல் மிக்க அற்புதமான மனிதர் அண்ணன் அஜித். எங்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துத் தெரிவித்த அவருக்கு நன்றி. அவர் விரும்பியபடி விளையாட்டுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை முதல்வர் ஏற்படுத்துவார்.

பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள், பெண்கள், ஆண்கள் வரை அனைவரும் எப்போது 9.30 மணி ஆகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இதனை அனைவரும் வரவேற்க வேண்டும்.

சட்டசபை நிகழ்வுகள் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருகின்றன. முந்தைய காலங்களில் சினிமா வசனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக் பேசிய வீடுகளில், இன்று சட்டசபை நிகழ்வுகள் நேரலை நாயகன் முதல்வர் விஜய் வாயிலாக சென்று சேர்ந்துள்ளன. ஒரு தலைமுறையையே எங்கள் தலைவர் மாற்றிக்கொண்டிருக்கிறார்.

யாரையும் விடமாட்டோம்!

தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “சம்பந்தப்பட்டவர் மூத்த அரசியல்வாதி. அவர் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார். நாங்கள் ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம்; தொடவும் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என முதல்வர் விஜய் பாணியில் பதிலளித்தார்.

தொடர்ந்து படிக்க