இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும் புகை
6 புரட்டாசி 2026 ஞாயிறு 12:48 | பார்வைகள் : 404
இந்தோனேசியாவில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அந்நாட்டின் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி புகைந்து கொண்டிருக்கிறது.
இவற்றில் சில வெப்பமண்டல பீட்லேண்ட் (கரிநிலம்) காட்டுத்தீயாகும். இவை மெதுவாக எரியக்கூடியவை, அதிக அளவிலான காற்று மாசுபாட்டை வெளிப்படுத்துபவை, மேலும் குறைந்த வெப்பநிலையில் நிலத்தடியில் எரிவதால் இவற்றை அணைப்பது மிகவும் கடினமானது.
நாசாவின் அக்வா செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பெரும் பகுதியை புகை சூழ்ந்திருப்பது தெரிகிறது. இதில், தீ பிடித்துள்ளதை குறிக்கும் வெப்ப முரண்பாடுகளை செயற்கைக்கோளின் 'MODIS' கருவி கண்டறிந்து சிவப்புக் புள்ளிகளாகக் காட்டியுள்ளது.
கரிநிலத் தீ நிலத்தடித் தாவரப் பொருட்களில் எரிவதால் வாரக்கணக்கில் தொடர்ந்து புகையும்.
நச்சுப் புகை அண்டை நாடுகளுக்கும் பரவி வான் வழியையும் மக்களின் சுவாச ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.



