தவெகவில் இணைந்த குற்றவாளி கொலை: உதயநிதி விமர்சனம்
7 புரட்டாசி 2026 திங்கள் 06:44 | பார்வைகள் : 292
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க உள்ள நிலையில், அவரது கட்சிப் பிரமுகர் ஒருவர் தலைநகரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதுவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி, சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில் இப்படி ஒரு கொலை நடைபெறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? அல்லது, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அனைவரும் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



