அதிகாரிகள் கட்டுப்பாடா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
7 புரட்டாசி 2026 திங்கள் 07:47 | பார்வைகள் : 239
அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்பது அவர்களின் கடமை. நியாயமான கோரிக்கைகள் மற்றும் கேள்விகளை அவர்கள் எழுப்பும்போது, அதற்கு முதல்-அமைச்சர் நிச்சயம் பதில் அளிப்பார்.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. முதல்-அமைச்சர் தனது பதிலுரையில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளிப்பார்.
வேடிக்கையானது
அதிகாரிகளின் ஆட்சி நடப்பதாக கம்யூனிஸ்டு கட்சிகள் விமர்சனம் செய்தது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:-
“அதிகாரிகளின் ஆட்சி கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் நடந்தது. கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சருக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும் அவர்கள் சொல்வதைக் கேட்டு மட்டுமே இயங்கிய ஆட்சியாக அது இருந்தது.
ஆனால், தற்போது அப்படி இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை குறிப்பிட்டு நடந்த ஒரு நிகழ்வுக்கு அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.
உண்மையில் தற்போது நேர்மையான, வெளிப்படையான தலைமை உள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக பொதுவாக பேச முடியாது.”
இவ்வாறு அவர் கூறினார்.



