ஆகஸ்டில் அதிகம் விற்பனையான Top 10 மின்சார இருசக்கர வாகனங்கள்

ஆகஸ்டில் அதிகம் விற்பனையான Top 10 மின்சார இருசக்கர வாகனங்கள்

6 புரட்டாசி 2026 ஞாயிறு 20:00 | பார்வைகள் : 278


இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.

இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட 11 சதவீதம் குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 (1.10 லட்சம்) விற்பனைக்கு ஒப்பிடும்போது 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

முக்கிய பிராண்டுகள் மற்றும் விற்பனை விவரங்கள்:
TVS Motor Company - 48,873 யூனிட்கள் (91 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி (YoY) வளர்ச்சி). மார்க்கெட் ஷேர் 27 சதவீதம்.
Bajaj Auto - 41,019 யூனிட்கள் (235 சதவீதம் YoY வளர்ச்சி). 2026-இல் 3 லட்சம் யூனிட்களை கடந்த இரண்டாவது நிறுவனம்.
Ather Energy - 28,708 யூனிட்கள் (16 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
Hero MotoCorp (Vida) - 18,978 யூனிட்கள் (10 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
Ola Electric - 13,849 யூனிட்கள் (29 சதவீதம் YoY குறைவு). மார்க்கெட் ஷேர் 18-8 சதவீதமாக குறைந்தது.
Greaves Electric Mobility (Ampere) - 8,612 யூனிட்கள் (89 சதவீதம் YoY வளர்ச்சி).
River Mobility - 5,134 யூனிட்கள் (170 சதவீதம் YoY வளர்ச்சி).
BGauss Auto - 4,844 யூனிட்கள்.
Simple Energy - 1,635 யூனிட்கள்.
Motovolt Mobility - 1,365 யூனிட்கள்.

TVS மற்றும் Bajaj முன்னணி இடங்களை பிடித்துள்ளன. Ather மற்றும் Hero Vida தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் Ola Electric மட்டும் YoY விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த தரவுகள், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகின்றன. புதிய பிராண்டுகள் (River, BGauss, Simple Energy) கூட Top 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

 

தொடர்ந்து படிக்க