காவல் நாயின் கூர்மையான மோப்ப சக்தியால் 37 கிலோ கஞ்சா பறிமுதல்!!

காவல் நாயின் கூர்மையான மோப்ப சக்தியால் 37 கிலோ கஞ்சா பறிமுதல்!!

6 புரட்டாசி 2026 ஞாயிறு 21:57 | பார்வைகள் : 1224


Ivry-sur-Seine பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் நாய் உதவியுடன் சுமார் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, ஆள்கள் யாரும் வசிக்காத ஒரு குடியிருப்பில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சுமார் 36 கிலோ கஞ்சா பிசின் (résine) மற்றும் 1 கிலோ கஞ்சா இலை/மொட்டு (herbe) இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருட்களின் சில்லறை சந்தை மதிப்பு 300,000 யூரோக்களுக்கும் அதிகமாக இருக்கும் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

போதைப்பொருளை கண்டறிவதில் பயிற்சி பெற்ற காவல் நாயின் மோப்பத் திறன், இந்தப் பெரிய அளவிலான பறிமுதலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக குறிப்பிடுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. ஆளில்லாத குடியிருப்பில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படிக்க