ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு: நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு: நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு

8 புரட்டாசி 2026 செவ்வாய் 09:36 | பார்வைகள் : 203


நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கடந்த ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 30 இடங்களில் சல்லடை போட்டு சோதனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது, நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளது. அதில், கட்சி நிதி என்ற பெயரில் டெண்டர்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, 13 பேர் மீதும் 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்ந்து படிக்க