மெட்ரோ ரயில் நெட்வொர்க் அமெரிக்காவை விஞ்சும் இந்தியா!

மெட்ரோ ரயில் நெட்வொர்க் அமெரிக்காவை விஞ்சும் இந்தியா!

8 புரட்டாசி 2026 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 224


உலகளவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை பொறுத்தவரை, இந்தியா விரைவில் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுக்க உள்ளது.

சர்வதேச அளவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் நம் அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் 11,000 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் உள்ளது. ஷாங்காய் நகரில் மட்டும் 900 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை அமைந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக, 1,386 கி.மீ. மெட்ரோ ரயில் நெட்வொர்க்குடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. 1,170 கி.மீ. மெட்ரோ ரயில் வழித்தடத்துடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டின் 26 நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவை விட இந்தியா வெறும் 216 கி.மீ. மட்டுமே பின்தங்கியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 5 நகரங்களில் 245 கி.மீ. ஆக இருந்த மெட்ரோ ரயில் நெட்வொர்க், தற்போது 1,170 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புற போக்குவரத்தை மறுவடிவமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத உள்கட்டமைப்பு வளர்ச்சியை இது காட்டுகிறது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் தற்போது 900 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சிறிய பகுதி செயல்பாட்டுக்கு வந்தால்கூட, அமெரிக்காவை இந்தியா எளிதில் விஞ்சி, மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் இரண்டாவது இடத்தை பிடித்துவிடும்.

### மெட்ரோ ரயில் நெட்வொர்க்: நாடு - மொத்த தூரம்

* சீனா - 11,000 கி.மீ.
* அமெரிக்கா - 1,386 கி.மீ.
* இந்தியா - 1,170 கி.மீ.
 

தொடர்ந்து படிக்க