எரிபொருள் விலை மீண்டும் உச்சம்: விநியோக நிறுவனங்களுடன் அமைச்சர் அவசர ஆலோசனை!!

எரிபொருள் விலை மீண்டும் உச்சம்: விநியோக நிறுவனங்களுடன் அமைச்சர் அவசர ஆலோசனை!!

9 புரட்டாசி 2026 புதன் 07:04 | பார்வைகள் : 1272


எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார அமைச்சர் Roland Lescure, இன்று செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி Bercy-யில் எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் மோதல் ஆரம்பித்த பின்னர், கடந்த சனிக்கிழமை SP95-E10 பெட்ரோலின் சராசரி விலை லீற்றருக்கு 2.10 யூரோவாக உயர்ந்துள்ளது. இது போர் ஆரம்பித்த பின்னர் பதிவான அதிகபட்ச விலையாகும்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை டீசல் எரிபொருளின் சராசரி விலை லீற்றருக்கு 2.27 யூரோவாக இருந்ததாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற போதிலும், ஏப்ரல் 2026இல் பதிவான 2.30 யூரோ என்ற சாதனை விலையை இதுவரை எட்டவில்லை. தற்போதைய விலைகள் 2022 ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச விலையை நெருங்கி வருகின்றன.

எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அதிகப்படியான இலாப வரம்புகளைப் பெறுகின்றனவா என்பதையும் அமைச்சர் இந்தக் கூட்டத்தில் ஆராயவுள்ளார். கடந்த ஜூலை மாதமும் அவர் விநியோகஸ்தர்களை சந்தித்து, விலை உயர்வில் “அதிகப்படியான இலாபம்” இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய முயன்றிருந்தார். இதனிடையே, பெப்ரவரி இறுதியுடன் ஒப்பிடுகையில் டீசல் விலை தற்போது 31.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணக்கீடுகள் தெரிவிக்கிறன.

தொடர்ந்து படிக்க