ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு! 11 மலையேற்ற வீரர்கள் பலி - 6 பேர் மாயம்
9 புரட்டாசி 2026 புதன் 11:01 | பார்வைகள் : 260
ரஷ்யாவில் உள்ள மிஸிர்ஜி மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காணாமற்போயுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 06.09.2026 குறித்த மலையில் 33 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ள நிலையில், அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த பனிச்சரிவு அனர்த்தத்தில் சிக்கியிருந்த மேலும் 16 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை காணாமற்போன 6 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



