முட்டை பொடிமாஸ்
9 புரட்டாசி 2026 புதன் 16:23 | பார்வைகள் : 273
வீட்டில் முட்டை வைத்து என்ன செய்து கொடுத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையை தினமும் சாப்பிடுது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. முக்கியமாக குழந்தைகளுக்கு.
எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு ஸ்டைலில் சுவையான முட்டை பொடிமாஸ் வீட்டிலேயே சில நிமிடங்களில் எளிதாக எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தைப் போட்டு பொரிந்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி முட்டை நன்கு வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் சாப்பிட ரெடி...



