இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
10 புரட்டாசி 2026 வியாழன் 15:29 | பார்வைகள் : 289
இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தவெக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
அக்டோபர் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குறுகிய காலமே இருப்பதால் திமுக சார்பில் இரு தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இன்று (செப். 10) தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் போட்டியிடுவார்கள் என்று தவெக அறிவித்துள்ளது. இருவரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள்.
கட்சியினர் அனைவரும் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டு, வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



