இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்; பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்; பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

11 புரட்டாசி 2026 வெள்ளி 09:15 | பார்வைகள் : 197


பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வர உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியா வர உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புடின் டெல்லி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ரஷ்ய அதிபர் புடின் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது அவர் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

மேலும், பிரதமர் மோடியையும் தனியாக சந்தித்து புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இவ்வாறு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்ந்து படிக்க