தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் துவக்கம்: அமைச்சர் கீர்த்தனா

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் துவக்கம்: அமைச்சர் கீர்த்தனா

11 புரட்டாசி 2026 வெள்ளி 10:19 | பார்வைகள் : 203


தூத்துக்குடியில் அமைய உள்ள ஹெச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்காக தமிழக அரசுடன் தென்கொரியாவைச் சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை உறுதி செய்வதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சென்று, அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதலீட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் சென்னை வந்திருந்த ஹூண்டாய் குழுமத்தினர், முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

**இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:**

தூத்துக்குடியின் கனவு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்வர் விஜயின் சிறந்த தலைமையின் கீழ், தூத்துக்குடியில் அமைய உள்ள ஹெச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகளான DFR மற்றும் விரிவான திட்டப் பணிகளான DPR ஆகியவை தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி கப்பல் கட்டும் மையத்தில், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தின் தூத்துக்குடி இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையமாக உருவாகும்.

இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க