தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார் இபிஎஸ்
11 புரட்டாசி 2026 வெள்ளி 12:28 | பார்வைகள் : 221
மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இத்தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
நேற்று திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இன்று தவெகவும் தனது வேட்பாளர்களை அறிவித்தது. இரு தொகுதிகளிலும் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி இணைச் செயலாளருமான கணிதா சம்பத் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பானுமதி போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
**இடைத்தேர்தலில் யார் போட்டி?**
**தாராபுரம்**
* சத்தியபாமா – தவெக
* சுகன்யா – திமுக
* பானுமதி – அதிமுக
**மதுராந்தகம்**
* மரகதம் குமரவேல் – தவெக
* பரந்தாமன் – திமுக
* கணிதா சம்பத் – அதிமுக



