மீண்டும் வெப்பம் அதிகரிப்பு - 31°C வரை உயர வாய்ப்பு!!
11 புரட்டாசி 2026 வெள்ளி 14:57 | பார்வைகள் : 1426
வாரத்தின் தொடக்கத்தில் நிலவிய குளிர்ச்சியான வானிலைக்குப் பின்னர், இந்த வார இறுதியில் நாடு முழுவதும் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கவுள்ளது. குறிப்பாக தெற்கு பிராந்தியங்களில் வெப்பநிலை 31°C வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உயர் அழுத்த வானிலை நிலை (conditions anticycloniques) வலுப்பெறுவதால், பெரும்பாலான பகுதிகளில் வறண்ட மற்றும் சூரிய ஒளியுடன் கூடிய வானிலை நிலவும் என Météo France தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் இயல்பை விட குறைவாக இருந்த வெப்பநிலை மீண்டும் படிப்படியாக உயரும்.
செப்டம்பர் மாதத்தில் வானிலை ரீதியான இலையுதிர் காலம் தொடங்கியிருந்தாலும், கோடை வெப்பம் இன்னும் முழுமையாக விலகவில்லை. வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை தெற்கு பிரான்ஸில் வெப்பநிலை 33°C வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை Sud-Ouest முதல் கிழக்குப் பகுதிகள் வரை குளிர்ச்சியான வெப்பநிலை காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



